Latestவிளையாட்டு

சாம்பியன்ஸ் லீக்; வாகை சூடியது லிவர்புல்!

மேட்ரிட், ஜூன் 2- சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் லிவர்புல் குழு 2-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் குழுவை வென்று சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியது.

மேட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் போது இரண்டாவது நிமிடத்திலேயே விவர்புல் குழுவிற்கு ஒரு பெனால்டி கிடைத்தது. இந்தப் பெனால்டியை அதன் முன்னணி ஆட்டக்காரர் முகமட் சாலா கோலாக்கி, தன்னுடைய குழுவை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

தொடக்கத்திலேயே ஒரு கோல் அடிக்கப் பட்டிருந்தாலும் டோட்டான்ஹாம் குழு தொடர்ந்து போராடியது. எனினும் அதன் தாக்குதல்கள் பலவற்றை லிவர்புல் குழுவின் கோல்கீப்பர் அலிசான் தடுத்து நிறுத்தி தனது குழுவை காப்பாற்றினார்.

இந்த ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் இருக்கும் போது லிவர்புல் குழுவின் மற்றொரு ஆட்டக்காரரான டிவோக் ஓரிஜி தன்னுடைய குழுவின் இரண்டாவது கோலை அடித்து லிவர்புலின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் லிவர்புல் வெற்றி பெற்றிருப்பது அக்குழுவின் ரசிகர்களை உற்சாக கடலில் மூழ்கடித்தது.

லிவர்புல் குழுவின் நிர்வாகியானஞர்ஜன் கிளோப் குழுவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பின்னர் முதன் முறையாக முக்கிய போட்டி ஒன்றில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.

கடந்த ஆண்டில் உக்ரைனில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் லிவர்புல் குழு ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் குழுவிடம் தோல்வி கண்டது. இன்றைய வெற்றியின் வழி இதுவரை லிவர்புல் குழு 6 முறை சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker