Latestமலேசியா

மலாய்க்காரர்கள் இடையே பிளவு: மனப்போக்கே காரணம்! -முக்ரிஸ்

அலோர் ஸ்டார், ஜூன் 2 – விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளமுடியாத சில தலைவர்களின் மனப்போக்கே மலாய்க்காரர்களின் பிளவுக்குக் காரணம் என கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமைக்கு இடையூராக சிலர் நடந்து கொள்வதால்தான் பிளவு ஏற்படுவதாகவும் அவர்கள் தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொண்டாலே பிரச்சினை தீரும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அம்னோவின் தலைவர் ஒருவர் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதைக் கண்டித்தால் தாங்கள் ஓரங்கட்டப்படுவோம் எனும் அச்சம் சில தலைவர்களிடையே நிலவியதால் , அங்கு பிரச்சினையும் பிளவும் ஏற்பட்டது.

அம்னோவிலும் பாஸ் கட்சியிலும் ஒற்றுமை குலைந்ததால்தான் பிரிபூமி பெர்சத்துவும் அமானா நெகாராவும் உருவாகின.

மேலும், பல தலைவர்களும் சமூகத்தில் நிலவும் பிரிவினையைப் பற்றிய கவலையைத் தெரிவித்துள்ளனர். மக்கள் தம்மை ஆராதிக்காமல் நாட்டின் மேம்பாட்டைப் பற்றியும் மக்களின் நல்வாழ்வு பற்றியும் சிந்திக்கும்படி பிரதமர் மகாதீர் கேட்டுக் கொண்டிருப்பதாக முக்ரிஸ் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker