Latestமலேசியா

மாற்று அந்நிய தொழிலாளர்களை தருவிக்கும் திட்டம் ! உள்ளூர் இந்தியர்களை அதிகம் பாதிக்கும்

கோலாலம்பூர். ஜூன்.2 – கந்தியான் எனப்படும் மாற்று அந்நிய தொழிலாளர்களை தருவிக்கும் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் அமலுக்கு கொண்டு வருவது மலேசிய இந்தியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என ஹிண்ட்ராப் 2.0 அமைப்பின் தலைவர் உதயகுமார் கருத்துரைத்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முடக்கப்பட்ட இந்த செயல்ப்பாடு தற்பொழுது மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் கோடி காட்டியுள்ளது.

இதன் தொடர்பில் அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் மலேசிய இந்தியர் வர்த்தக சங்கங்களின் சம்மேளனம், இந்த திட்டத்தை இந்திய வர்த்தகர்கள் செய்து வரும் சில தொழில்களுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து தொழில்களிலும் அமல்படுத்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

அந்த கோரிக்கையை குறித்து பேசிய உதயகுமார் மேற்கண்ட கருத்தினை முன்வைத்துள்ளார்.

மலேசிய இந்தியர்களில் 75 விழுகாட்டினர், வேலை செய்து தங்களின் வாழ்க்கையை நடத்தும் பி75 பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

அப்படி இருக்கையில் இது போன்ற செயல்பாடுகளை மீண்டும் அமல்ப்படுத்தினால் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

எனவே இனி அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்காமல் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்க முதலாளிமார்கள் முன் வர வேண்டும் என அறிக்கை ஒன்றின் மூலம் உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker