Latestசினிமா

வரலட்சுமியின் அதிரடி நடிப்பு! -சரத்குமார் பாராட்டு!

சென்னை,ஜூன். 2- வரலட்சுமி நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் ‘சேஸிங்’ .இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சரத்குமார் சென்று படக் குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.

தென்னிந்திய மொழி படங்களில்  நடித்து வரும் வரலட்சுமி தற்போது அவரது நடிப்பில் உருவாகி வரும் சேஸிங் என்ற ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமொன்று உருவாகி வருகிறது்.

இப்படத்தை வீரக்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாகியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல் டூப் ஏதுமில்லாமல் சண்டை போடும் வீடியோ ஒன்றை வரலட்சுமி பகிர்ந்தார்.

வரலட்சுமியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன் இந்த படத்திற்கான சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இருந்தார் .

தற்போது இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகரும் வரலட்சுமி தந்தை சரத்குமார் சென்று  வரலட்சுமியின் சண்டைக்காட்சியை பாராட்டியது மட்டுமல்லாமல் படக்குழுவினரையும் பாராட்டினார். இது படக்குழுவினருக்கு மட்டுமல்லாது வரலட்சுமிக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker