Latestமலேசியா

2 வயது  குழந்தை கொலை: நபர் மீது மரண தண்டனை சட்டத்தில் குற்றச்சாட்டு

குரூண், ஜூன். 2-  இரண்டு வயதுடைய வளர்ப்பு மகனை கொலை செய்ததாக வேலையில்லாத இளைஞர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மாதம் யான் என்ற இடத்தில் இந்தக் கொலையை அந்த நபர் புரிந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. 28 வயதுடைய சோபியுடின் அபு பக்கார் என்ற அந்த நபருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நூருல்ரஷிதா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதனைப் புரிந்து கொண்டதாக அந்த நபர் தெரிவித்தார்.

இந்த நபரிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பெறப்படவில்லை.  முகமட் அக்கில் ஹைரி  என்ற 2 வயது   வளர்ப்பு மகனை, கடந்த மே மாதம் 25ஆம் தேதி இரவு  7.30 மணிக்கு 8 மணிக்கும் இடையே கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிருபணமானால்,  கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட சட்டம் வகை செய்கிறது.

இதனிடையே அந்த இரண்டு வயது சிறுவனின் பெற்ற தாயார் நூருல் நட்தாஷா (வயது 23) என்பவருக்கு நீதிமன்றம் 10,000 ரிங்கிட் அனுமதி வழங்கியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker