Latestமலேசியா

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது!-பிளாஸ்

கோலாலம்பூர், ஜூன்.3- இன்று நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்தகவலை உறுதிப்படுத்திய பிளஸ் சாலை மேலாண்மை நிறுவனம், சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆயினும் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்து  சமூகமாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளை கிழக்கு கடற்கரை சாலையில் (எல்பி1 & எல்பி2) இரு வழிகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கோம்பாக் டோல் சாவடியில் சற்று நேரம் தாமதம் ஏற்படுகின்றது என மலேசிய நெடுஞ்சாலை நிறுவனமும் (எல்எல்எம்) தகவல் வெளியிட்டுள்ள்அது.

நோன்பு பெருநாள் பெரு விடுமுறையையோட்டி நாட்டில் உள்ள சாலைகளில் வாகன நெரிசல் அதிகளவில் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை குறைக்கத் திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ளும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

சாலை போக்குவரத்து நிலவரங்களை அறிந்து கொள்ள பொதுமக்கள் 1-800-88-0000(பிளஸ்),1-800-88-7752 (எல்எல்எம்) என்ற எண்ணைகளை தொடர்பு கொள்வதோடு www.twitter.com/plustrafik , www.twitter.com/llminfotrafik ஆகிய சமூக வலைத் தள பக்கங்களையும் வலம் வரலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker