Latestமலேசியா

படகுக்குள் நீர் புகுந்தது- 18 பயணிகள் தப்பினர்!

சிபு, ஜூன் 3 – விரைவுப் படகின் மாலுமியின் சமயோசித செயலினால் 18 பயணிகள் உயிருடற் சேதமின்றி காப்பாற்றப்பட்டனர்.

நேற்று காலை 8.30 மணியளவில் சிபுவிலிருந்து காப்பிட்டிற்கு 18 பயணிகளுடன்  சென்று கொண்டிருந்த விரைவுப் படகு, கனோவிட் நகரின் ஜெட்டியில் கரை ஒதுங்கியது.

அப்போது இரும்புப் பொருளின் மீது மோதுண்டு, அதன் இயந்திரப் பகுதியில் துவாரம் ஏற்பட்டு,  படகில் நீர் ஏறியது.

படகில் நீர் விரைவாக ஏறியதால், அனைத்துப் பயணிகளும் இறக்கப்பட்டனர். அதன் பின்னர் மாலுமி படகை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டிச் சென்று,  கரையோறத்தில் ஒதுக்கி நிறுத்தினார். அதன் மூலம் பெரும் பாதிப்பிலிருந்து பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

அதன் பின்னர், 18 பயணிகள் வேறொரு படகில் காப்பிட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker