Latestமலேசியா

பந்து பட்டாசு: சிறுவனின் பார்வையைப் பறித்த துயரம்!

தஞ்சோங் பாத்து, ஜூன். 3 – பந்து பட்டாசு வெடித்ததன் காரணமாக 10 வயது சிறுவனுக்குக் கண் பார்வை பறிபோன துயரச் சம்பவம் இங்கு நடந்தது.

நேற்று, தஞ்சோங் பத்துவில் அமைந்துள்ள வீடமைப்புப் பகுதியில், அந்தச் சிறுவன் பந்து பட்டாசைக் கொளுத்தி விளையாடியதாகத் தெரிகிறது.  மேலும், அந்த பந்து பட்டாசுகளை ஒரு காலி டின்னில் வைத்து வெடிக்க முயற்சித்துள்ளான். ஆனால், அந்தப் பட்டாசுகள் வெடிக்கவில்லை.

பட்டாசு ஏன் வெடிக்கவில்லை என டின்னைத் திறந்து பார்த்தபோது, திடீரென்று அது வெடித்துச் சிதறியதாகத்  தெரிகிறது. டின் வெடித்துச் சிதறியதில் அதன்  துண்டுகள் சிறுவனின் வலது கண்ணில் பட்டு இரத்தக் கொட்டியது.

அந்தச் சிறுவன் பெக்கான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். நிலைமை கடுமையாக இருந்ததால்,  அவன் துங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். பரிசோதித்துப் பார்த்ததில் சிறுவனின் வலது கண்ணில் டின்னின் துண்டுகள் பட்டதில், பார்வையை இழக்க நேரிட்டிருக்கும் அபாயம் உள்ளதாக என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பெருநாள் காலங்களில், இது போன்ற விபரீதங்கள் ஏற்படாமல் இருக்க, விழிப்புணர்வாக அமையும் நோக்கில், அச்சிறுவனின் புகைப்படங்கள் நேற்று வலைத்தலங்களில் வைரலாகியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker