Latestமலேசியா

பருவநிலை மாற்றம் பேரணி; சுங்கை ஆரா மாணவர்கள் கலந்து கொண்டது தவறா?

ஜோர்ஜ் டவுன், ஜூன் 4 – மே 24ஆம் தேதி பருவநிலை மாற்றம் சம்பந்தமான பேரணியில் பினாங்கு சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டதற்கான விளக்கத்தை மாநில கல்வி இலாகா அறிவுறுத்தி உள்ளது.

அது பற்றி பள்ளியின் பேச்சாளார் ஒருவர் கூறும்போது, அந்த நிகழ்ச்சியில் 11 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.  அதில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டுமென நிர்வாகம் கேட்டுக் கொள்ளவில்லை என்றும் மாணவர்களின் பெற்றோரே அவர்களைக் கூட்டிச் சென்றனர். அதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டுமென குறிப்பிட்டார்.

அது பற்றி விளக்கமளித்த வடப் பகுதி பருவகால நடவடிக்கைக் குழுவின் (கேஆ ஓஎம்)பேச்சாளர் ஒருவர், அந்நிகழ்ச்சி உலகளாவிய நிலையில் 125 நாடுகளைச் சேர்ந்த 2,350 நகர்களில் 18 லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகள் பருவகால மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்க வலுயுறுத்திய ஒரு நிகழ்ச்சியின் ஒரு பகுதி என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளையைப் போன்றே பீடோர் சூங் குவா இடைநிலைப் பள்ளி மாணவர்களும் பெற்றோரோடு கலந்து கொண்டனர். எனவே, அதில் கலந்து கொண்ட மாணவர்களின் மீதும் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதை கல்வி அமைச்சு தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker