Latestமலேசியா

பாராங் கத்தியால் கார் கண்ணாடியை உடைத்த நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் பாரு, ஜூன் 4- ஜாலான் ஃபிர்மாவிலிருந்து பாசீர் கூடாங் நெடுஞ்சாலைக்கு நுழையும் சாலையில் சென்ற  மற்றொரு காரின் கண்ணாடியை பாராங் கத்தியால் அடித்து உடைத்த இரு ஆடவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

நீல நிற ஹோண்டா சிவிக் ரக காரில் சென்ற இருவர், வாகன நெரிசலில் இடம் கொடுக்காது சென்ற காரை நிறுத்தி ஆபாச சைகையைக் காட்டியுள்ளனர்.

கொஞ்ச தூரம் சென்ற பின்னர், மீண்டும் தங்களின் காரில் இருந்து இறங்கி சம்பந்தப்பட்ட காரின் முன் கண்ணாடியை பாராங் கத்தி கொண்டு தாக்கி உடைத்த பின் அங்கிருந்து சென்றுள்ளனர்.

தொடக்கக் கட்ட விசாரணையில் ஹோண்டா காரில் சென்றவர்கள்  முந்திச் செல்ல முடியாததால், ஆத்திரமடைந்து அந்தக்  காரை தாக்கியதாகத் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட இருவரையும்  தேடிவருவதாக ஜோகூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ முகமட் காலில் காடெர் முகமட் தெரிவித்தார்.

அந்த  நபர்களின் செயல், சாலை பகடிவதையாகக்  கருதப்பட்டு அவர்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டதாக முகமட் காலில் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker