Latestமலேசியா

ஹோட்டலில் கொள்ளை: நால்வருக்கு போலீஸ் வலைவீச்சு

பத்து பஹாட், ஜூன் 4 – ஆயர் ஹீத்தாமில் மலிவு விலை ஹோட்டல் ஒன்றில் கொள்ளையடித்த நான்கு திருடர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று காலை 6.20 மணியளவில் கதவின் மணி அடித்த பின்னர், முகப்பு ஊழியர் கதவைத் திறந்தபோது, ஒருவன் உள்ளே நுழைந்து அவரது கழுத்தில் பாராங் கத்தியை வைத்து, கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துள்ளான்.

அதன் பின்னர், இரு நபர்கள் உள்ளே புகுந்து, யாமாஹா மோட்டார் சைக்கிள், 32 இஞ்ச்  எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டி, ரொக்கம் ரிம. 350ஐ கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

அதனை அடுத்து, சிசிடிவியின் வழி திருடர்களின் அடையாளத்தைக் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீசாரிடம் விவரத்தைத் தெரிவிக்கலாம் எனவும் பத்து பகாட் துணை ஆணையர் ரசாலி முகமட் தாஹிர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker