Latestமலேசியா

எம்ஏசிசி: லத்தீபா பாரபட்சமின்றி செயல்படுவாரா? – மசீச கேள்வி

கோலாலம்பூர், ஜூன் 5 – ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக வழக்கறிஞர் லத்தீபா கோயா நியமிக்கப்பட்டதில் சந்தேகம் எழுவதாக மசீச தலைவர் வீ கா சியோங் குறிப்பிட்டார்.

லத்தீபா பிகேஆரின் முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார். அவர் தமது பதவிக் காலத்தில் பாரபட்சமில்லாமலும் நடுநிலையாகவும் நடந்து கொள்வாரா? என அவர் கேள்வி எழுப்பினார்.

அவரின் நியமனம் தேர்தல் வாக்குறுதியை மீறிய செயலாக இருக்கிறது. அவர் பிகேஆரில் இருந்து விலகினாலும் பாரபட்சம், நேர்மை, நியாயம் போன்றவை அவரிடம் இருக்குமா என வீ கா சியோங் தமது சந்தேகத்தை எழுப்பியுள்ளார். பிகேஆர் தலைவர் உட்பட நேர்மையான எவரும் அந்த நியமனத்தை ஏற்க மாட்டார்கள்.

எம்ஏசிசியின் தலைவர் முகமட் சுக்ரி அப்துலின் தவணைக் காலம் 2020 மே 17இல் முடியும் எனும்போது, அவசரகதியில் அவர் விலக்கப்பட்டு லத்தீபாவை நியமிக்கும் நோக்கம்தான் என்ன? எம்ஏசிசியில் தற்போது பதவில் இருக்கும் தகுதியான ஒருவரை அப்பதவியில் நியமித்திருந்தால் அதில் நேர்மை இருந்திருக்கும்.

அவரின் நியமனமானது அமைச்சரவைக்குத் தெரியுமா? லத்தீபா எப்போதும் அன்வாரை எதிர்த்தே வந்துள்ளார். அன்வார் பிரதமர் பதவியை அடைய விடாமல் தடுக்கும் சதி போல அந்த நியமனம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker