Latestஇந்தியா

‘பதில் சொல்லுங்கள்’-நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஜூன் 6 திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்துவது குறித்து தமிழக
அரசும் சங்கத் தலைவர் விஷாலும் பதிலளிக்க சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல்
30ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை
மேற்கொள்ள மாவட்ட பதிவாளரான என் சேகரை தனி அதிகாரி
யாக தமிழக வணிக வரித்துறை நியமித்து உத்தரவிட்டது.

தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த
உயர்நீதிமன்றம் தனி நிர்வாகி நியமனத்துக்கு தடை விதிக்க
மறுத்ததோடு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை
ஒத்திவைத்தது.

இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்
விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின்
பதவிக்காலம் முடிந்து விட்டதால் தேர்தலை உயர்நீதிமன்றம் ஓய்வு
பெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிட வேண்டும் என
முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் தரப்பில் தாக்கல்
செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரையும் ஒன்றாக இணைத்து விசாரணைக்கு
உத்தரவிட்ட நீதிபதி,, தேர்தலை நடத்துவது தொடர்பாக தமிழக
பத்திர பதிவுத்துறை தலைவர் சங்கத்தை தற்போது நிர்வாகிக்கும்
தனி அதிகாரி மற்றும் சங்கத் தலைவர்   விஷால் ஆகியோர்
பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூன்
16ஆம் தேதி தள்ளி வைத்தார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker