Latestமலேசியா

பஸ் நிறுத்தத்தில் பிளாஸ்டிக் பையில் சிசுவின் உடல்!

கோலாலம்பூர், ஜூன். 6-  பிளாஸ்டிக் பையில் திணிக்கப்பட்ட நிலையில், பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்று இங்கு உள்ள பஸ் நிறுத்தத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கோலாலம்பூர், ஜாலான் புக்கிட் பெர்மாய் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீஇந்தான் அடுக்குமாடி வீட்டின் முன்புறம் இந்த சிசுவின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக  அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் ஏசிபி நோர்  அஸ்மி யூசுப் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் பையில் திணிக்கப்பட்ட நிலையில் அந்த சிசுவின் உடல் கிடந்ததை 14 வயதுடைய சிறுமி ஒருவர் கண்டதைத் தொடர்ந்து  உடனடியாக போலீசுக்கு தகவல் தரப்பட்டது.

சம்பவ இடத்திற்கு  அம்பாங் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழு விரைந்தது.  அந்த குழந்தையை பரிசோதித்ததில் அது இறந்து விட்டது என்பது தெரியவந்தது என்று அவர் சொன்னார்.

அந்த சிசுவின் உடல் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர் என்று நோர் அஸ்மி  யூசுப் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker