Latestமலேசியா

மின்னல் தாக்கி இந்திய குடும்பத்தில் மூவர் மரணம்: நெகிரி அரசு உடனடி உதவி!

சிரம்பான், ஜூன். 6- நேற்று செவ்வாய்க் கிழமை தங்களின் ஆட்டுப்பண்ணையில் மின்னல் தாக்கி, ஓர் இந்திய தம்பதியரும் அவர்களது மூன்று வயது மகனும் மரணமடைந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நெகிரி செம்பிலான் அரசாங்கம் 6,000 ரிங்கிட் உதவித்தொகை வழங்கியது.

ஜெம்போல், பெல்டா பாலோங் அன்னன் என்ற இடத்தில் உள்ள ஆட்டு பண்ணை ஒன்றில் எஸ். இளங்கோவன் (வயது 38) அவருடைய மனைவி காளியம்மாள் 9வயது 36) ஆகியோருடன் அவர்களது 3 வயது மகன் விக்னேஸ்ஹும் மின்னல் தாக்கி மரணமடைந்த தியரம் நடந்தது.

அதில் இந்த தம்பதியரின் 9 வயது மகன் கடுமையான தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஆட்டுப் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த போது கடும் மின்னல் தாக்கியுள்ளது.

மேலும் பண்ணையில் இருந்த ஆறு ஆடுகள் இரண்டு நாய்களும் மின்னலின் தாக்குதலில் மாண்டுள்ளன.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிர் நீத்த இளங்கோவன், காளியம்மா, மற்றும் விக்னேஷ் ஆகியோரின் இறுதிச்சடங்கிற்கு உதவும் வகையில் அவர்களின் குடும்ப உறவினர்களிடம் நெகிரி செம்பிலான் அரசாங்கம் உடனடி உதவியாக ஆ6 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கியுள்ளது.

இந்தத் தகவலை மாநிலத்தின் மனிதவள, தோட்ட மற்றும் இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள் குமார் தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மின்னல் தாக்கி இறந்து இருப்பது வேதனை தரும் சம்பவமாக அமைந்து விட்டது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இவர்களின் இறுதிச் சடங்கிற்கு இந்த பணம் உதவியாக இருக்கும் என்று மாநில அரசு கருதுவதாக அருள்குமார் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker