Latestமலேசியா

லத்தீபாவின் நியமனம்: தங்களுக்கு தெரியாது!  – அமைச்சர்கள் கருத்து

புத்ரா ஜெயா, ஜூன். 6 –  ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்தீபா கோயா நியமிக்கப்பட்டது அமைச்சரவைக்குத் தெரியாது என பல அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அது பற்றிக் கேட்டபோது,  அது தமக்குத் தெரியாது என உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

பிகேஆரின் உறுப்பினர் பதவியிலிருந்து லத்தீபா விலகும் 3ஆம் தேதியிட்ட மின்னஞ்சல் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமிற்கு அனுப்பப் பட்டுள்ளதாகக் கட்சியில் தலைமைச் செயலாளரான அவர் குறிப்பிட்டார்.

எந்த நியமனமும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்குச் செல்ல வேண்டுமென தாங்கள் கேட்டுக் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை அந்தச் செய்தியைப் பார்க்கும் வரை அது பற்றி தமக்குத் தெரியாது எனப் பொருளாதாரத் துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

அந்த நியமனமானது, லத்தீபாவின் தகுதியின் அடிப்படையில் தான் இருக்குமே தவிர, அரசியல் ரீதியானதாக இருக்காது. மேலும், லத்தீபாவுக்கு  ஒரு வாய்ப்பைத் தருவதில் தவறில்லை என்றும்  அஸ்மின் குறிப்பிட்டார்.

தகவல், பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, லத்தீபாவின் நியமனம்  பற்றி  அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

அவர் அனுபவமிக்கவர், தகுதியானவர் என்பதால் அவரின்  நியமனம் தமக்கு  ஆச்சர்யம் அளித்தது. தமது பதவியில் அவர் பல பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். அவருக்குச் சட்டங்களின் நுணுக்கமும் திறமையும் இருப்பதால்,  அதற்கு அவர் பொருத்தமானவரே என கோபிந்த் சிங் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker