Latestமலேசியா

3 யானைகளை விஷம் வைத்துக் கொன்றதற்கு  ஆதாரம் உண்டு! – சேவியர் ஜெயகுமார்

கோத்தா திங்கி, ஜூன் 6 – ஜோகூர், குளுவாங்கில் உள்ள கம்போங்  ஶ்ரீதீமோர் -3 இல் மூன்று யானைகள் விஷம் வைத்துக் கொல்லப் பட்டிருக்கின்றன என்ற சந்தேகம் வலுவடைந்திருப்பதாக  நீர், நிலம், மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்,

யானைகளின் பிரேத பரிசோதனையில் குற்றச் செயல் நடந்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எம்மாதிரியான விஷம் வைத்து யானைகள் கொல்லப்பட்டன என்பது இன்னும் தெரியவில்லை. எனவே, யானைகளின் நுரையீரல், சிறு நீரகங்கள்  ஆகியவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள செம்பனைத் தோட்டங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதைத் தடுப்பதற்காக மின்சார வேலிகள் அமைக்கப் பட்டுள்ளன.  யானைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தொடர்பில்  விவரம் தெரிந்தோர் போலீசாருக்கு அது பற்றித் தெரிவிக்க வேண்டுமென சேவியர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker