Latestவாழ்க்கை

அதிகமான இண்டர்நெட் பயன்பாடு: நினைவாற்றலை பாதிக்கிறது!  -ஆய்வு

வாஷிங்டன், ஜூன் .7 -அளவுக்கு அதிகமாக இண்டர்நெட் பயன்படுத்துபவர்களின் நினைவாற்றல் பாதிப்பு அடையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய அறிவியலாளர்களின் புதிய ஆய்வு ஒன்றில் அதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்துவோருக்கு அவர்களின் நினைவாற்றல் பாதிக்கப்படும் என கண்டறிந்துள்ளனர்.

அதிகமாக  இண்டர்நெட்டைப் பயன்படுத்தும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை சோதனை செய்யப்பட்டது. அவர்களது மூளையை ‘ஸ்கேன்’ செய்து பார்க்கப்பட்டது.  இந்த ஆய்வின் முடிவுகள் உலக மனநல மருத்துவச் சஞ்சிகைகளில் வெளியாகி உள்ளன.

இண்டர்நெட்டில் உள்ள வரம்பற்ற ஸ்ட்ரீம் ஒருவரை தொடர்ந்து திசை திருப்பி வைத்திருப்பதை ஊக்குவிக்கிறது. வேறு ஒரு பணியில் கவனத்தை செலுத்தும் திறன் கணிசமான அளவில் குறையும் என ஆய்வாளர் ஜோசப் பிர்த் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் தலைவரும் மேற்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானியுமான ஜோசப் பிர்த்,  இணைய வடிவமைப்பு எவ்வாறு மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் திறன்களை இரண்டாக பிரிக்கிறது என்பதை  குறிப்பிட்டுள்ளார்.

தேவையான தகவல்கள் ஆன் லைனில் கிடைக்கின்றன. நமது மூளையில் சேர்த்து வைக்க வேண்டிய தேவையில்லை. கூகுள் தேடலில் விக்கிபீடியாவிலும் தகவல்கள் கிடைக்கின்றன. அதனால் விஷயங்களை மூளையில் சேமித்து வைக்க வேண்டிய தேவைகள் குறைகின்றன. இதானல் நமது நினைவாற்றல் கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டை இழக்கிறது என்கிறார் ஜோசப் பிர்த்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker