Latestவிளையாட்டு

நெய்மார் கற்பழித்தார்: நடந்தது என்ன? -மாடல் அழகி டி.வி.யில் பகிரங்கப் பேட்டி!

பிரேசிலியா, ஜூன். 7- பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரரான நெய்மார், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டிய இளம் பிரேசிலிய மாடல் அழகி, தொலைக்காட்சியில் தோன்றி ‘என்ன நடந்தது?’ என்பது பற்றி விளக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தனக்கும் நெய்மாருக்கும் இடையே நடந்த சில குறுஞ்செய்தி பரிமாற்றங்களைத் தொடர்ந்து, சுய இணக்கத்தின் பேரில் பாரிசில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியதாகவும் அதேவேளையில் தான் ஹோட்டலில் தங்கும் செலவுகளை நெய்மாரே ஏற்றுக் கொண்டதாகவும் நஜிலா டிரின்டேட் என்ற அந்த மாடல் அழகி தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்.

எனினும், அது சுய விருப்பத்தின் பேரில் அமையவில்லை நெய்மார் தன்னைத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றஞ் சாட்டினார்.

மறுநாள், நெய்மரின் ஹோட்டல் அறைக்கு சென்ற நஜிலா, அங்கு நெய்மாரை கன்னத்தில் அறைந்து, ”என்னிடம் ஏன் பலாத்காரம் செய்தாய்?” என்று கேட்பதும், நெய்மார் பதிலுக்கு நஜிலாவை காலால் எத்த முனைவதும் அடங்கிய ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கற்பழிப்புக் குற்றச்சாட்டை மறுத்த நெய்மார், ‘இதெல்லாம் செட்-அப் என்பது அந்த வீடியோ காட்சியில் இருந்தே தெரிகிறது. வீடியோ எடுக்கும் ஏற்பாட்டுடன் தான்   நஜிலா செயல்பட்டுள்ளார் எனபதும் இதிலிருந்து தெரிகிறது.. ‘திட்டமிட்டு என்மீது பழி சுமத்துவதற்காக அந்தப் பெண் நடத்திய நாடகம்தான் இது’ என்று நெய்மார் சாடினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker