LatestVideosஇந்தியா

பிரியங்காவின் கணவர் வதேராவின் லண்டன் சொத்துக்கள் முடக்கமா?

லண்டன், ஜூலை .7 காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர்   ராபர்ட் வதேரா தொடர்புடைய 8 பிரிட்டன் வீடுகளின் விவரங்களை அந்நாட்டு அரசிடம் அமலாக்கத்துறை கேட்டு உள்ள நிலையில் அந்த சொத்துக்களை முடக்க திட்டமிட்டுள்ளது.

பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீது ஏராளமான நில அபகரிப்பு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் வெளி நாடுகளில் சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான அமலாக்கப் பிரிவு தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பெற்றிருக்கும் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதனிடையே வெளிநாடுகளுக்கு வதேரா செல்ல நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. இதற்கும் அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் ராபர்ட் வதேரா வாங்கிக் குவித்திருக்கும் சொத்து விவரங்களை அமலாக்கத்துறை பெற்றிருக்கிறது. குறிப்பாக, ரூபாய் 45 கோடி மதிப்புள்ள வீடு ,ரூபாய், 36 கோடி மதிப்புள்ள வீடு, மற்றும் 6 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றின் உரிமையாளர் ராபர்ட் வதேரா தான்  என சந்தேகிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக லண்டனில் உள்ள வதேராவின் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை மும்முரமாக இறங்கியுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker