Latestஇந்தியா

விஷால் அணி உடைகிறதா?  தேர்தலில் போட்டியிடுபவர் யார்!

சென்னை,ஜூன்,7- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் எதிர்த்து போட்டியிடும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பக்கம்  சிலர் செல்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது .

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கடந்த முறை போட்டியிட்ட விஷாலின் பாண்டவர் அணி இந்த முறையும் களம் காண்கிறது. பாண்டவர் அணியின் சார்பில் தலைவராக நாசர் ,பொருளாளராக கார்த்திக் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகின்றனர் .

இந்நிலையில் பாண்டவர் அணியை எதிர்த்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களம் காண்கிறார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் எதிர்த்து ஐசரி கணேஷ் , துணைத்தலைவர் பதவிக்கு நடிகர் உதயா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

தலைவர் பதவிக்கு கே.பாக்கியராஜ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நடிகர்கள் விக்னேஷ் , ஆர்கே சுரேஷ் ,நடிகைகள் ராதிகா, குட்டி பத்மினி ஆகியோரும் போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker