Latestமலேசியா

அந்நிய தொழிலாலர்களை இழிவுப்படுத்த வேண்டாம் ! -எரிக் பவுல்சன்

கோலாலம்பூர், ஜூன்.8- நாட்டில் உள்ள அந்நிய தொழிலாளர்களும் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும் என மனித உரிமைக்கான ஆசியா நாடுகளின் கூட்டமைப்பு ஆணையத்தின் மலேசிய பிரதிநிதி எரிக் பவுல்சன் கருத்துரைத்துள்ளார்.

முன்னதாக தனது நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில், அந்நிய தொழிலாளர்கள் இல்லையென்றால் மலேசியா இன்னமும் வளர்ச்சி காணாத நாடாக தான் இருந்திருக்க கூடும்  என பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் கருத்திற்கு உடன்பாடு தெரிவிக்கும் வகையில் எரிக் பவுல்சன் இவ்விவகாரம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இங்கு மலேசியர்கள் செய்ய தயங்கும் பல வேலைகளை அந்நிய தொழிலாளர்கள் தான் செய்து வருகின்றனர். அவர்கள் சிந்தும் வியர்வை, உதிரத்திற்கு மதிப்பு கிடைக்கப் பெறாமல் இழிவுப்படுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக, அவர்களில் பலர் சட்டத்தில் உள்ளது போல் குறிப்பிட்ட பணி நேரம் மட்டும் வேலை செய்யவில்லை. மாறாக  நம்மை காட்டிலும் பல மணி நேரம் அதிகமாகவே உழைக்கின்றனர். அதில் பெரும்பாலான வேலைகள் மிகவும் ஆபத்தானவை.

ஆனால், அவர்களின் ஊதியம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு மிகக் குறைவாக இருக்கிறது. உள்நாட்டு தொழிலாளர்களுக்கு கிடைக்கப் பெறும் சேமநிதி, காப்புறுதி போன்ற திட்டங்களும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

அதே சமயம், அந்நிய தொழிலாளர்களில் பலரின் கடப்பிதழ் ஆவணங்கள் அவர்களின் முதலாளிமார்களிடம் தான் உள்ளது.

மேலும் இங்கு வரும் அந்நிய நாட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் கிடையாது. அவர்களில் பலர் நேர்மையாக உழைக்கின்றனர்.

ஆனால் அவர்கள் மூலம் தான் பல நோய்கள் பரவுகின்றன, அவர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என முழுப் பழியையும் அவர்கள் மீது சுமத்துவதில் நியாயம் கிடையாது என அவர் விவரித்துள்ளார்.

இன்னும் சொல்லப் போனால் விடுமுறைக் காலங்களில் கேஎல்சிசி போன்ற தலைநகரில் பிரதானப் பகுதிகளில் அந்நிய நாட்டினரே  இருக்கின்றனர் என்ற கூற்றையும் முழுவதுமாய் ஏற்க முடியாது.

எனவே, உள்நாட்டு மக்கள் இங்குள்ள அந்நிய தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான மரியாதையை தரவேண்டும் என்றும் எரிக் பவுல்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker