Latestஉலகம்

அமெரிக்க- சீன வர்த்தகப் போர்; தீர்வு எங்கே? -சிங்கை பிரதமர்

சிங்கப்பூர், ஜூன்.8-  அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போர், இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வராது. இதற்கான தீர்வை எட்ட இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

இங்கு நடந்த வர்த்தக விருது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார் அடுத்து நடைபெறும் ஜி-20 உச்சநிலை மாநாட்டின் போது அதிபர் டிரம்ப்பும் அதிபர் ஸீ ஜின்பிங்கும் சந்தித்து இந்த வர்த்தக மோதல் பற்றிப் பேச ஒரு வாய்ப்பு பிறந்து உள்ளது.  எனினும் இந்த ஒரே சந்திப்பில் தீர்வு பிறந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை  என்கிறார் பிரதமர் லீ.

இவ்விரு நாடுகளும் பழைய நிலைக்கு திரும்ப போவதில்லை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்பது ஒரு நீண்ட சுரங்கப் பாதையாக உள்ளது. பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அந்தச் சுரங்கத்தில் இருந்து வெளியேற வழி கிடைக்கலாம் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker