Latestஇந்தியா

ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்: வரலாறு படைத்த ஜெகன்மோகன்!

அமராவதி, ஜூன். 8 -சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக 5 துணை முதல்வர்கள் நியமனம் நியமித்து புரட்சி செய்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

மாநிலங்களில் முதல்வர் பதவி தான் பிரதானமானது. இருப்பினும் உட்கட்சி மோதல்கள் கூட்டணி கட்சிகள் தக்கவைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கான துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் சாசனப்படி முதல்வருக்கு தான் அதிகாரம். துணை முதல்வர்கள் என பதவி வகித்தாலும் ஒர் அமைச்சருக்கான அதிகாரங்கள் தான் அவர்களுக்கும் உண்டு. மாநிலங்களில் துணை முதல்வர் பதவி என்பது அண்மைய காலமாக வழக்கமான ஒன்றாகிவிட்டது.

அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் 2 துணை முதல்வர் பதவி வகித்து இருக்கின்றனர் தற்போது இரண்டு துணை முதல்வர்கள் இருக்கின்றன.

இதுதான் இதுவரையான துணை முதல்வர்களின் அதிக எண்ணிக்கையாக இருந்ததையும் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி முறியடித்து 5 துணை முதல்வர்கள் ஜாதிய அடிப்படையில் நியமித்திருக்கிறார் .

தற்போது அருணாச்சலப் பிரதேசம், டெல்லி, குஜராத், பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், மணிப்பூர் மேகாலயா, மிசோரம் என 14 மாநிலங்களில் துணை முதல்வர்கள் உள்ளனர். இருப்பினும் சமூக பிரிவினை அடிப் படையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் துணை முதல்வர்கள் நியமனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker