Latestமலேசியா

இணைய காதல் மோசடி;  ரிம.3.38 மில்லியனை இழந்த 51 வயது மாது !

கப்பளா பத்தாஸ், ஜூன்.8- இணைய காதல் மோசடி வலையில் சிக்கிய  51 வயதுடைய மாது ஒருவர், சுமார் 3.38 மில்லியன் ரிங்கிட்டை   இழந்துள்ளார் என வட செபராங் பிறை மாவட்ட காவல்படை தலைவர் ஒசிபிடி நூர்ஸைனி முகமட் நூர் தெரிவித்தார்

வங்கியில் பணி புரியும் அம்மாதுவிற்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாத வாக்கில் இணையத்தில் உள்ள “Coffee Meets Bagel” எனும் செயலியில் ஜோன் ஏரிக் சேன் எனும் நபருடன் அறிமுகம் கிடைத்துள்ளது.

ஜோன் எனும் அந்நபர் சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான வியாபாரம் செய்ய இம்மாதுவையும் அழைத்துள்ளார். ஆனால் அதற்கு சுமார் 38,000 டாலர் ( 157,624 ரிங்கிட்) முன் பணம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் அம்மாதுவை திருமணம் செய்து கொள்வதாகவும் அந்நபர் வாக்குறுதி அளித்துள்ளார். அந்நபரின் பேச்சில் மயங்கிய மாது, கடந்த வருடம் ஆகஸ்ட் – செப்டம்பர் மாத இடையில் தனக்கு வழங்கப்பட்ட 3 வங்கி கணக்குகளில் 19 தடவை மொத்தமாக 815,331 டாலரை செலுத்தியுள்ளார். இத்தொகையின் மலேசிய ரிங்கிட் மதிப்பு 3.38 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

பணம் செலுத்திய பின் அந்நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதை அடுத்து, தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த அந்த மாது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என அவர் விவரித்தார்.

அம்மாது தனது சம்பளம், சேமிப்பு மட்டுமின்றி உறவினர்கள்- தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இந்த தொகையை செலுத்தியுள்ளார். தற்பொழுது இப்புகார் செக்‌ஷன் 420 இன் கீழ் மோசடி சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுககின்றது.

இன்றைய நவீன காலக்கட்டத்தில் பொதுமக்கள் இது போல் அடையாளம் தெரியாத நபர்களை எளிதில் நம்பி பணம் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஒசிபிடி நூர்ஸைனி முகமட் நூர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker