Latestமலேசியா

இலங்கை பிரஜைகளை ஐரோப்பாவுக்கு கடத்தும் மலேசிய கும்பல் முறியடிப்பு!

கோலாலம்பூர், ஜுன். 8-  ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை பிரஜைகளைக் கடத்துவதில் ஈடுபட்டு வந்த ஆள்கடத்தல் கும்பலை மலேசிய போலீசார் முறியடித்துள்ளனர்.

இந்த ஆள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த ஒரு மலேசியர் மற்றும் அவரது இரு சகாக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு  ஆள்கடத்தலை மேற்கொள்வதற்கு முன்னர் கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில்   இலங்கைப் பிரஜைகள் இந்தக் கும்பலால் சிலர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

கடந்த மே 27இல் மூன்று மலேசியர்கள் மற்றும் 8 இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக மலேசிய போலீஸ் படை தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் அவர் சொன்னார். பாடாங் புசார் சுங்கச் சாவடி மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில்  போலீசார் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர் என்றார் அவர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker