Latestமலேசியா

பயணிகளின் ‘செல்பி’ படம் கட்டாயம்!- கிராப் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன்.8- எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதிக்குள் தனது வாடகை கார் சேவையை பயன்படுத்தும் பயணிகள் தங்களின் செல்பி படத்தை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று இணையம் வழி வாடகை கார் சேவை நடத்தும் கிராப் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஓட்டுநர்களுக்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும் பாதுகாப்பு தரும் அம்சத்தை முன்னிட்டு இந்த திட்டம் அறிவிக்கப் பட்டிருக்கிறது.

கடந்த மே மாதத்தில் கிராப் ஓட்டுநர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலிசார் புலன் விசாரணை செய்வதற்கு இத்தகைய செல்பி படம் உதவியாக இருந்திருக்கிறது.

அந்த செல்பி படத்தை வைத்து முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் மூலம் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் அடையாளம் கண்டு பிடிக்கப் பட்டனர் என்பதை கிராப் நிறுவனம் சுட்டிக்காட்டியது.

தன்னுடைய சேவயைப் பயன்படுத்துகின்ற பயணிகள், இத்தகைய செல்பி படங்களை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம் என்று அது அறிவித்திருக்கிறது. இத்தகைய செல்பி படங்களின் மூலம் பயணிகளின் அடையாளங்களை அடையாள விவரங்களை பதிவு செய்யும் முறையை கிராப் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

இது பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பாக அமையும். இந்த செல்பி படம், அடையாள விவரம் அறிவதற்கும் பாதுகாப்புக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படும். போலீஸ் தங்களின் விசாரணைக்கு தேவை என்று கூறும்போது அவை அவர்களுக்கு வழங்கப்படும் என்று கிராப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த செல்பி படங்களில் போலிகளை கண்டறிய கிராப் நிறுவனம் சம்பந்தப்பட்ட பயணிகளிடம் மேலும் ஒரு செல்பி படத்தை தாக்கல் செய்யும்படி கூறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று என்று அந்நிறுவனம் கூறியது. மேலும் பயணிகளின் அடையாளம் மற்றும் இதர விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் என்பதற்கும் கிராப் உறுதி கூறியிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker