Latestவிளையாட்டு

மகளிர் உலகக் கிண்ண கால்பந்து: பிரான்ஸ் அபார ஆட்டம்!

பாரிஸ், ஜூன்.8- பிரான்சில் தொடங்கிய  உலக மகளிர் கிண்ண கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில், போட்டியை ஏற்று நடத்தும் நாடான பிரான்ஸ் 4-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.

சொந்த ரசிகர்களின் முன்னிலையில் மிகச் சிறப்பாக விளையாடிய பிரான்ஸ் மகளிர் அணி, முற்பகுதி ஆட்டத்தின் போது 3-0 என்ற கோல் கணக்கில் முன்னணி வகித்தது.

மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி ஜூலை 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நடப்பு உலகச் சாம்பியனான அமெரிக்கா அடுத்த இரு தினங்களில் தாய்லாந்துடன் மோதவிருக்கிறது.

பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய அணிகள் மிக வலுவான அணிகள் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்களுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் வாகை சூடியுள்ளதைப் போல மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் சாம்பியனாக வாகை சூட உறுதி கொண்டிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker