Latestஉலகம்

விண்வெளி கூடத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி -நாசா 

நியூயார்க், ஜூன். 8-  விண்வெளியில் செயல்பட்டு வரும் அனைத்துலக விண்வெளி ஆய்வுக் கூடமான ஐ எஸ் எஸ்-க்கு  அடுத்து ஆண்டு முதல் சுற்றுப் பயணிகள் சென்றுவர அனுமதிக்கப்படுவர் என்று நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகம் கூறியது.

இந்த விண்வெளி ஆய்வுக் கூடத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை குறைப்பதற்கு இந்த சுற்றுலா பயணங்கள் மூலம் வழி வகுக்கப்படும் என்று நாசா தெரிவித்தது.

இரண்டு முறை சுற்றுப்பயணம் சென்று வருவதற்கான பின்பு விண்கல பயணம் ஏற்பாடு செய்யப்படும் என்று நாசாவின் நிதித் துறை இயக்குனர் ஜேப் டிவிட் சொன்னார்.

30 நாட்கள் வரை கூட தங்குவதற்கு ஏற்பாடு செய்யப் படக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் எனினும், சுற்றுப் பயணங்களுக்கான கட்டணம் மிக அதிகமாக இருக்கும் என்றும்   அவர் சொன்னார்.

அதாவது, விண்கலம் ஆண்டுக்கு  இருமுறை சென்று வருவதற்கு 58 மில்லியன் டாலர் கட்டணம் விதிக்கப்படலாம். எனினும் இதில் எத்தனை பேர் பயணம் செய்யலாம் என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker