Latestமலேசியா

அமைச்சரவையில் ‘ஆமாம்’ சாமிகள் மகாதீரின் முடிவே திணிப்பு! -மசீச சாடல்

கோலாலம்பூர், ஜூன். 8-  பக்காத்தான் அரசாங்கம் அமைத்திருக்கும் இரண்டு அரசாங்க குழுக்களால் வெறும் பண விரயமும் கால விரயமும் தான் மிச்சம் என்று மசீசவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் சாடினார்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழு மற்றும் அரசாங்க நிர்வாக நேர்மை மீதான அமைச்சரவைக் குழு ஆகியவற்றின் முடிவுகள் மதிக்கப்படுவது இல்லை. அவை அலட்சியப் படுத்தப் படுகின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இந்த அமைச்சரவை குழுவை அமைத்தார். ஆனால் புதிய எம்ஏசிசி யின் தலைவராக  லத்தீபா கோயா நியமிக்கப்பட்டிருக்கும் விஷயத்தில் இந்த நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் நிலை முற்றாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

லத்தீபா விவகாரத்தில் அமைச்சர்கள் மௌனம் சாதிப்பதைப் பார்த்தால் அமைச்சரவையில் பெரும்பாலும் ‘ஆமாம்’ போடுகின்ற உறுப்பினர்களே அதிகம் இருக்கிறார்கள் என்பது தெளிவாகி விட்டது என்று முன்னாள் அமைச்சருமான வீ கா சியோங் சாடினார்.

லத்தீபாவை தன்னிச்சையாக பிரதமர் துன் மகாதீர் நியமித்திருக்கிறார் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  ஆனால் அவரது நியமனம் குறித்து நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு கொண்டு செல்லப்படவில்லை.
அதேவேளையில்  அமைச்சரவைக்கும் இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று  அவர் கூறினார்.

தனது தேர்தல் கொள்கை வாக்குறுதிகளை முற்றாக மறந்துவிட்டது துன் மகாதீர் எடுக்கிற முடிவுகளை மட்டுமே வலுக்கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker