Latestமலேசியா

ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயன்ற நபர் கைது

கோத்தா கினபாலு, ஜூன் 9 – தாவாவ், ஜாலான் பெர்பண்டாரானில் உள்ள தானியங்கி பணப்பட்டு வாடா(ஏடிஎம்) இயந்திரத்தைத் காகித பின்னைக் கொண்டு திறக்க முயன்ற திருடன் கையும் களவுமாகப் பிடிபட்டான்.

நேற்று, சனிக்கிழமை காலை 8.20 மணியளவில் அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றபோது அவன் வங்கியில் கைது செய்யப்பட்டதாகத் தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அஸிஸுல்கிஃப்லி மன்சோர் தெரிவித்தார்.

அந்தத் திருடன் வங்கியின் கதவில் சட்டம் ஒன்றை வைத்து உள்ளே யாரும் நுழைய முடியாது செய்த பின்னர், ஏடிஎம் இயந்திரத்தின் மேல் மூடியைத் திறந்து, பின்னர் உள்ளே இருந்த மூடியைத் திறப்பதில் தோல்வி கண்டான்.

அப்போது வங்கியின் அலாரம் ஒலிக்கத் தொடங்கியது. அது தொடர்ந்து ஒலித்ததாகவும், அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் அவனைக் கைது செய்தனர்.

குப்பைக் கூடையில் கிடந்த காகித பின்களைக் கொண்டுஇயந்திரத்தின் மூடியை திறக்க முற்பட்டபோது, வங்கியினுள் நுழைய முயன்ற வாடிக்கையாளர்களை உள்ளே நுழைய விடாமல் இருக்க எச்சரித்துள்ளான்.

விசாராணையில் அவன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சில மாதங்களாக அவன் அவ்வட்டாரத்தில் சுற்றித் திரிந்ததாகவும் அவன் மீது குற்றப் பதிவு எதுவும் இல்லை எனவும் தெரிய வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker