Latestசினிமா

ஒரே ஆணுடன் வாழ முடியாது! -சர்ச்சையைக் கிளப்பிய ஸ்ரீரெட்டி

சென்னை, ஜூன். 9 -தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டிக்கும் சர்ச்சைக்கும் அத்தனை நெருக்கம். எப்போதும் அவர் பேஸ்புக் பதிவு போட்டாலும் அது தீயாகப் பற்றிக் கொள்கிறது.ஞ நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், என தனது பேஸ்புக் பதிவுகள் போட்டு அத்தனை பேரையும் கதற விட்டவர்.

அவர், தற்போது திருமணம் குறித்து ஒரு பதிவு போட்டு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். அதாவது தன்னால் ஒரே ஆணுடன் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். தனது பதிவில் என் பெற்றோரை தவிர வேறு யார் மீதும் என்னால் அன்பு செலுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

‘எனக்கு ஒருவரை பிடித்து இருந்தால் அவருடன் ஒரு வருடம் தான் சேர்ந்து இருக்க முடியும். அதனால்தான் எனக்கு திருமண பந்தமும் பிடிக்காது. ஒவ்வொரு முறையும் எனக்கு புதிது புதிதாக காதல் வேண்டும்.  என்வாழ்க்கையில் நாடகம் இல்லை. பொறுப்புணர்வு இல்லை. குழப்பம் இல்லை  என்று தன்னைப் பற்றி ஶ்ரீ ரெட்டி இப்படி கூறியுள்ளார். இந்தப் பதிவு குறித்து வலைத்தளவாசிகள் மத்தியில் பெரும் சர்ச்சை மூண்டுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker