Latestசினிமா

டிவி நடிகரை 2ஆவது திருமணம் செய்யும் நந்தினி 

சென்னை, ஜூன். 9- திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை நந்தினி, டிவி நடிகர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார் .

வெண்ணிலா கபடி குழு படத்தின் நகைச்சுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நந்தினி. வம்சம் ,கேடி, பில்லா, கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

டிவி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினி என்று இவரை அழைத்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு வருடத்திலேயே கார்த்திகேயன்  குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்பட்டது.

போலீசார் விசாரணை நடத்தினர். நந்தினி கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இது படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவர் இறந்த சில மாதங்களுக்கு பிறகு நந்தினி மீண்டும் டிவி தொடர்களில் நடிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் டிவி நடிகர் யோகேஷ் அவரை காதலிப்பதாக நந்தினி அறிவித்துள்ளார் கடந்த ஒரு வருடமாக இருவரும் நண்பர்களாக பழகி வந்ததாகவும் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker