Latestமலேசியா

துங்கு இஸ்மாயிலின் கவிதைக்கு- கவிதை மூலம் பதில்

கோலாலம்பூர், ஜூன் 9 – அண்மையில் ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் வெளியிட்ட கவிதை வரிகள் கடும் கண்டனத்துக்கு உட்பட்டது.

டிஎம்ஜே எனப்படும் துங்கு இஸ்மாயில், தமது சகோதரர்களோடு பாஜு மெலாயு தெலோக் பெலாங்காவோடு கருப்பு நிற கால்சட்டை அணிந்து டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

அதோடு, கருப்பு நிற கால்சட்டை அரச குடும்பத்துக்கே சொந்தம் எனும் தொனியில், ‘ஊர்க்குருவி கழுகைப் போல் பறந்தாலும், அது கழுகைப் போல ஆக முடியாது’, இதனை யாரும் மறந்து விடாமல், நீங்கள் ஏங்கே நிற்கிறீர்கள் என்பதை மறந்து விடாமல், புல்லுக்கும் அடியில் உங்களின் கனவுகளைப் புதைத்துக் கொள்ளுங்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதில் சொல்லும் வகையில் இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் ஸ்டீவன் சிம், ‘பருந்துகள் உயரப் பறக்கின்றன, குருவிகள் கீழே பறக்கின்றன ‘ என தமது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதனை அடுத்து, இன்னொரு வாசகர், இறுமாப்பு கொண்ட பருந்து உயரப் பறப்பதாகவும் ஆனால், ஏழைக் குருவி கீழே பறப்பதாகவும் சொன்னார்.. நாம் இறந்தால் மண்ணில்தான் புதைக்கப்படுவோம் என்பதை மறக்கக் கூடாதெனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர், வேறொருவர், ‘பருந்து மேலே பறக்கிறது, குருவி கீழே பறக்கிறது, மனிதரில் உயர்வு தாழ்வினை இறைவனே உறுதி செய்கிறான்’ என குறிப்பிட்டிருந்தார்.

அதனையடுத்து இன்னொருவர், ‘பருந்து மேலே பறக்கிறது, குருவி கீழே பறக்கிறது, நாம் இறந்தால், எலும்பு, பற்கள், உடை ஆகியவை பயனற்றுப் போகும்’ என சுட்டிக் காட்டியுள்ளார்.

வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் ரம்லா ஆடம், டிஎம்ஜே வை விமர்சிக்கும்போது வரம்பு மீறக் கூடாது என குறிப்பிட்டதைப் பலரும் கண்டித்து, சக மலேசியர்களுக்கு டிஎம்ஜே மரியாதை தரவில்லை எனக் குறை பட்டுக்கொண்டனர் என தெ ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker