Latestமலேசியா

அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டச் சம்பவம்; ஆடவர் படுகாயம்

ரானாவ், ஜூன் 10- ஆடவர் ஒருவரை சில நபர்கள் தாக்கும் காணொளி நேற்று சமூக வளைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.
இதனை அடுத்து, அந்தச் சம்பவ இடத்தில் இருந்த பொது மக்களை போலீசார் மேல் விபரம் வழங்க வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

நேற்று இந்தச் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு 28 வயதுடைய ஆடவர் ஒருவர் புகார் அளித்ததாக ரானாவ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டன் முகமட் ஷாருல் அப்துல்ல வாஹாப் உறுதிப்படுத்தினார்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 12.15 மணியளவில் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆடவர் கடை ஒன்றின் பின்புறப் பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் போது வெள்ளை நிற ப்ரோடுவா விவா ரக காரிலிருந்து சில நபர்கள் இறங்கி மற்ற சில நபர்களை தாக்கியிருக்கின்றனர். அக்காட்சியைக் கண்டு தன்னை தற்காத்துக் கொள்ள முயன்ற போது தம்மையும் அவர்கள் தாக்கியதாக அந்த ஆடவர் புகாரில் தெரிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து, தன்னை தற்காத்துக் கொள்ள அருகில் உள்ள பழக் கடையை நோக்கி ஓடிய சம்பந்தப்பட்ட ஆடவரை திடீரென இரண்டு வெளிநாட்டு நபர்கள் 41 சென்டிமீட்டர் கொண்ட இரும்புக் கம்பியைக் கொண்டுத் தாக்கியதாக அந்தப் புகாரில் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே, தன்னை பல முறை தலையில் அவர்கள் தாக்கியதாகவும் அதன் பின், தான் அவர்களிடம் இருந்து அந்த இரும்புக் கம்பிகளையும் பிடுங்கியதை அடுத்து அவர்கள் அந்த இடத்தை விட்டுத் தப்பித்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட ஆடவர் ரானாவ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இந்தச் சம்பவத்தைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீசில் புகார் செய்யும் படி முகமட் ஷாருல் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 324 கீழ் விசாரணைச் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker