Latestமலேசியா

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் : நிக் பைசாலே முழுமையாக நடத்தினார்

கோலாலம்பூர், ஜூன் 10 – தாம் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட்டாலும், நஜிப்புடனான தொடர்புக்கு முக்கிய நபராக நிக் பைசால் அரிஃப் கமில்தான் செயல்பட்டதாக டான்ஶ்ரீ இஸ்மீ இஸ்மாயில் தெரிவித்தார்.

நஜிப் சம்பந்தப்பட்ட எஸ் ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடல் வழக்கில் சாட்சியமளித்த இஸ்மீ, அதன் முக்கிய முடிவெடுப்புகளில் தலையிட்ட நிக் பைசால் நஜிப்பின் ஆலோசனைகளைப் பெறவும் உத்தரவுகளைத் தெரிவிப்பதிலும் பெரும் பங்கு வகித்தார் என தெரிவித்தார்.

எஸ்ஆர்சியில் நிர்வாக நடைமுறையில் நிக் பைசாலே முக்கிய நபராக விளங்கியதாகவும் அவரே நிறுவனத்துக்கும் நஜீப்புக்கும் இடைத் தரகராகச் செயல்பட்டதாக இஸ்மீ குறிப்பிட்டார்.

நிறுவன நிர்வாகத்தைப் பற்றி தாம் கேள்வி எழுப்பிய போதெல்லாம், அது பற்றி அரசுக்குத் தெரிவிக்கப்பட்டதாக நிக் பைசால் தெரிவித்து வந்துள்ளார். அரசு என்பது நஜிப்தான் என தாம் பின்னர் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அந்நிறுவனத்தின் நிர்வாகம், அதன் நிதி நிர்வாகம் சம்பந்தமாக அதிருப்தி  அடைந்த தாம் பதவியிலிருந்து விலக  2014 மே 6இல் விலகல் கடிதத்தைக் கொடுத்து  அது ஆகஸ்டு 15இல் அமலுக்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.  அந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ஆகஸ்டு வரை நிர்வாகத்தில் தாம் ஈடுபாடு காட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker