Latestஇந்தியா

பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன்  மாரடைப்பால் காலமானார்!

சென்னை, ஜூன். 10-  பிரபல நகைச்சுவை நடிகர் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் (வயது 68) இன்று காலை மாரடைப்பால் காலமானார்>

தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த நகைச்சுவைகளை வழங்கிய வசனகர்த்தாக்கள், நடிகர்களில் ஒருவராக கிரேஸி மோகன் திகழ்ந்து வந்தார்.

மேடை நாடகங்களிலும்  நாடகத் துறை வசப் படைப்புக்களும் கிரேஸி மோகன் தனி முத்திரை பதித்தவர். ஒரு பொறியியல் பட்டதாரியான இவர்,  இயற்கையிலேயே நகைச்சுவை உணர்வு   மிகுந்தவர் என்பதால் இந்த துறையை தேர்ந்தெடுத்ததாக அடிக்கடி கூறியிருக்கிறார்.

நாடகத் துறையில் இருந்து அவர் சினிமாவுக்கு தாவியபோது நடிகர் கமலஹாசனின் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் வசனகர்த்தாவாகவும் அவர் விளங்கி வந்தார்.

கமல்  படங்களில் அவர் எப்போதுமே முக்கிய பாத்திரத்தில் நடிப்பது வழக்கமாகும் அவரது நகைச்சுவை படங்களில் முக்கிய பாத்திரம் ஏற்பதோடு, நகைச்சுவை வசனங்களையும் கிரேஸி மோகன் எழுதி வந்தார்.

அபூர்வ சகோதரர்கள், முதல் அவ்வை சண்முகி வரையில் அருணாச்சலம், காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம் என தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மிகச் சிறந்த நகைச்சுவைப் படங்களின் வசனகர்த்தா இவர்தான்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker