Latestமலேசியா

பேராவில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு பிளாஸ்டிக் பைக்குத் தடை !

ஈப்போ, ஜூன்.10- பேரா மாநிலத்தில் இனி வாரத்திற்கு மூன்று நாட்களில் பிளாஸ்டிக் நெகிழி பைகள் உபயோகப் படுத்தக்கூடாது என்ற முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இத்தகவலை அம்மாநில சுகாதார, பயனீட்டாளர் விவகார, மனிதவள, தேசிய ஒருமைப்பாடு பிரிவு ஆட்சிக் குழு உறுப்பினரான ஏ.சிவநேசன் தெரிவித்தார்.

இம்மாநிலத்தில் தற்பொழுது வாரத்தின் ஒரு நாளில் (சனிக்கிழமை) பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு அதன் பயன்பாட்டை தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்விவகாரம் தொடர்பில் வரும் ஜூன் 26ஆம் தேதியன்று நடைபெறவுள்ள மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் நான் அறிக்கை சமர்பிக்க உள்ளேன். அதில் இம்மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்த விவரங்களும் இடம் பெற்றிருக்கும். அதே சமயம் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தடை செய்யப்படும் கிழமைகள் தேர்வு செய்யப்படும் என அவர் விவரித்தார்.

சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில்தான் இம்முடிவு எடுக்கப்படுகின்றது. எனவே இத்தடைக்கான நாட்களை அதிகப்படுத்துவதில் மாநில அரசுக்கும் எவ்வித முரனும் கிடையாது. ஆயினும் இத்திட்டம் முழுமையாக நிறைவேற வியாபாரிகள், பயனீட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மாநில அரசும் இந்நடவடிக்கையை கண்காணிக்கும் என்றும் சிவநேசன் குறிப்பிட்டார்.

இதற்கிடையே கெடா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வாரத்தில் இரு நாட்களுக்கு (வெள்ளி – சனிக் கிழமை) பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker