Latestமலேசியா

ரிம10 கொடுக்காத மகளைத் தாக்கிய தந்தை; தடுத்த மனைவிக்கும் பலகையால் அடி

குவால திரெங்கானு, ஜூன்.10 – மெக்கானிக் ஒருவர்  தனது மனைவியைப் பலகையைக் கொண்டு தாக்கி மற்றும்  தமது 11 வயது மகளின் தலையில் உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வியாழக்கிழமை, கம்போங் கொங் பாக் டாமாட் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில், சம்பந்தபட்ட 32 வயதுடைய அந்த ஆடவரை போலிசார் கைது செய்து நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

இதன் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது,   அந்த ஆடவர், மகளுக்கு கிடைத்த ‘ராயா அங்பாவ்’- லிருந்து, கைப்பேசி டோப் ஆப் (Top up) அட்டை வாங்க 10 ரிங்கிட்டை இரவல் கேட்டுள்ளார்.  உடனே அந்தச் சிறுமி இல்லை என்று மறுக்கவும், கோபமடைந்த அந்த ஆடவர் அச்சிறுமியின் தலையில் உதைத்துள்ளார்.

மகளுக்கு ராயா பெருநாளின் போது  நிறைய பணம் கிடைத்ததை  அறிந்தே அவர் அவ்வாறு தாக்கியதாக தெரியவந்துள்ளது. மகளை தாக்குவதைத் தடுக்க வந்த மனைவியையும்  பலகையால் தாக்கியுள்ளார் அந்த ஆடவர். மேலும், அருகிலுள்ள விளையாட்டு காரை தூக்கி எறிந்ததில் மனைவியின்  நெற்றியில் பட்டு ரத்தம் வரும் அளவிற்கு  காயம் ஆனதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட ஆடவர் மீது செக்‌ஷன் 323 குற்றவியல்  2012 வீட்டு வன்முறைச் சட்டம் பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker