Latestமலேசியா

லத்தீபா நியமனம் சட்ட ரீதியில் சரி; அரசியல் ரீதியில் தவறு – கிட் சியாங்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 10 –  ஊழல் தடுப்பு  ஆணையத் தலைவராக லத்தீபா கோயாவின் நியமனம் அரசியலமைப்பு விதிகளின் படி சரியாக இருந்தாலும், அரசியல் கோனத்தில் தவறாகும் என ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.

அது பிரதமரின் முழு அதிகார வரம்புக்கு உட்பட்டதாக இருந்தாலும் அது பொதுத்தேர்தல் கொள்கை வாக்குறுதிகளுக்கு மாறானதாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

தற்போதைய பிரச்சினையே லத்தீபா அப்பதவிக்குத் தகுதியானவரா என்பது அல்ல,  மாறாக
அது தேர்தல் வாக்குறுதிக்கு மாறானது என்று கருதப்படுவதே ஆகும்.

அது தேர்தல் வாக்குறுதிக்கு மாறானது என்று கூறுவோரின் கூற்று தவறாகாது. ஆனால் அதேசமயத்தில் வாக்குறுதியில் கூறப்பட்ட மாற்றம் இன்னும் அரசியலைப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லை. அந்த வகையில் மகாதீரின் முடிவு சட்ட ரீதியில் சரியே.
ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
அரசியலமைப்பு விதித் திருத்தம் தோல்வி அடைந்த பின்னர் புதிய மலேசியாவுக்கு ஏதுவாக எந்த மாற்றமும் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிட் சியாங் குறிப்பிட்டார்.

பக்காத்தானின் ஆட்சியை நிலைப்படுத்தவும் ஊழலை ஒழிக்கவும் அதிரடி முடிவுகளை எடுப்பதுவும் தவறில்லை. ஜூன் 4இல் லத்தீபாவின் நியமனம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது தமது சுய முடிவு, இறுதியான முடிவு எனவும் துன் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker