Latestஇந்தியா

ஆந்திராவின் ஆளுனரா சுஷ்மா சுவராஜ்?

புதுடெல்லி, ஜூன். 11- ஆந்திரா மாநிலத்தின் புதிய ஆளுனராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஆளுனராக நரசிம்மன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஆந்திராவில் கவர்னர் நரசிம்மனுக்கு பதிலாக புதிய கவர்னராக சுஷ்மா சுவராஜை அதிபர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தபோது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் உடல் நிலை காரணமாக மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இத் தகவல் உறுதி செய்யப்படாத நிலையில் மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆந்திராவின் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள சுஷ்மா சுவராஜுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இத்தகவல் உண்மை அல்ல என சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker