Latestஉலகம்

ஆற்றில் உல்லாச படகு விபத்து; 20 பேர் மரணம்!

புடாபெஸ்ட், ஜூன், 11  ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டிலுள்ள டானுபி ஆற்றில் சுற்றுப் பயணிகளின் படகு ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 8 பேரை காணவில்லை.

தென் கொரியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த  உல்லாசப் படகில் பயணம் செய்த போது மற்றொரு படகுடன் அவருடன் மோதி விபத்துக்குள்ளாகி ஆற்றில்  மூழ்கியது.

 

தற்போது மூழ்கிக் கிடக்கும் அந்தக் படகை மீட்பதற்காக பணிகளில் மீட்புப் பணியாளர்கள் தொடந்து ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே எழுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

கடுமையான கடும் நீர்ப் பெருக்கு காரணமாக இந்த மீட்புப் பணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்பட்டது  சுற்றுப் பயணிகளின் சிலரது உடல்கல்  இன்னமும் அந்த உல்லாசக் படகினுள் சிக்கிக் கொண்டிருப்பதாக மீட்புப் பணியாளர்கள் கூறினர்.

மூழ்கிவிட்ட அந்த படகு கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வரப்பட்டு  கொண்டிருப்பதாகவும் அந்தப் பணிகளில் மிகவும் சிரமம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த  படகு ஒரு பாலத்திற்கு கீழ் கடந்து சென்ற போது மற்றொரு படகுடன் மோதியதாக அதிகாரிகள் கூறினர். இதுவரையில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker