Latestசினிமா

இனிமல் பாடுவதே இல்லை என முடிவு செய்த  அந்தக் கணங்கள்! -பாடகி சித்ரா நெகிழ்ச்சி

சென்னை, ஜூன். 11-புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தந்தையின் கண்ணீரைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இனி வாழ்க்கையின் பாடுவதில்லை என முடிவு எடுத்ததாக பிரபல பின்னணி பாடகி சித்ரா மனம் திறந்துள்ளார்.

தனது தந்தை குறித்து மனம் திறந்து உள்ள பாடகி சித்ரா, அவரது பொறுமை மற்றும் தியாகம் தனக்குள் இருக்கும் பாடகியை வெளிக் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். கேரளாவில் பிரபலமான பாடகராக வலம் வந்த கிருஷ்ணன் நாயர் என்பவரின் மகள்தான் பின்னணி பாடகி சித்ரா. ஒரு கட்டத்தில் ஆசிரியர் பணிக்குச் சென்று விட்ட கிருஷ்ணன் நாயர் தனது மகளை பாடகியாக காணவேண்டும் ஆசையில் அவரை இசை கற்க வைத்துள்ளார்.

பின்னர் நாடக மேடைகளில் பாடிய சித்ரா தொடர்ந்து திரைப்படங்களிலும் பாடத் தொடங்கினார் .பெரும்பாலும் மலையாள படங்களில் பாடல்கள் தமிழகத்தில் சென்னையில் பதிவு செய்யப்பட்டு வந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் அந்தப் பாடல் பாடி விட்டு செல்வது வழக்கம்.

அந்த காலகட்டத்தில் அவரது தந்தை சித்ராவின் கூடவே துணைக்கு வந்து போயுள்ளார். இசையின் நுணுக்கங்களை தெரிந்த கிருஷ்ணன் நாயர் மகள் பாடுவதை அருகிலிருந்து உற்சாகப்படுத்தியும் வந்துள்ளார். சம்பவத்தன்று கங்கை அமரன் இசையில் ஒரு மலையாளப் படத்திற்கு பாடல் பாடும் வாய்ப்பு சித்ராவுக்கு அமைந்தது. சித்ரா பாடல் பாடி கொண்டு இருந்துள்ளார். துணைக்கு வந்த தந்தை எப்போதும் போல அறைக்கு வெளியே காத்திருந்தார்.

அவருக்கு நோய் பாதித்து மிகவும் அவதிப்பட்டு வந்த காலகட்டம் அது. சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்துக்கொள்ள சித்ரா மன்றாடிக் கேட்டும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என சித்ரா நினைவுகூர்ந்துள்ளார்.

அன்றைய தினம் தந்தையின் அந்த நிலை கண்டு மிகவும் வருந்தியதாக கூறும் சித்ரா அந்த நகர நாட்கள் இனி தேவையில்லை எனவும் வாழ்க்கை இனி பாடுவதாக இல்லை எனவும் ஒரு கணம் முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.

பாடல் பதிவு முடிந்த உடனே தந்தையை அழைத்து வெளியே வந்தபோது அவர் இதுவரை பாடல்கள் பாடியது போதும் தந்தையின் வலியை தாங்கிக் கொள்ளும் வலிமை தமக்கு இல்லை எனக் கூறி அழுதுள்ளார். பின்னர் அன்றைய நாள் பாடுவதாக இருந்த பாடல்கள் பதிவுகள் வேறு ஒரு நாளுக்கு மாற்றிவிட்டு இருவரும் கேரளா திரும்பியுள்ளனர் .

அந்தக் காலக் கட்டத்தில் மிகவும் உடல்நிலை மோசமடைந்த கிருஷ்ணன் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர்நீத்தார். அவரது மறைவுக்கு பின்னர் சித்ரா மீண்டும் படவேண்டும் என்ற வாக்குறுதியை தந்தை கிருஷ்ணன் பெற்றததால் தான் சித்ரா மீண்டும் பாடத் தொடங்கி பல விருதுகளை பெற்றதை மனநெகிழ்வுடன் அவர் பகிர்ந்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker