Latestமலேசியா

சமையலறையில் தூக்குப் போட்டு பெண் தற்கொலை

தானா மேரா, ஜூன்.11 – தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், கம்போங் தாமான் செலாசே குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூக்குப் போட்டுப்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த மறுநாள் காலை 7.30 மணியளவில், சமையல் அறையில் தமது மனைவி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் கணவர், போலீஸ் நிலையத்தில் புகார்  அளித்தாகத் தானா மேரா மாவட்ட போலீஸ் தலைவர்  சுசாய்மி முகமட் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் உடலை பரிசோதித்ததில் , கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட தடயத்தைத் தவிர  வேறு எந்தக் காயமும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். மேலும்,  சவப் பரிசோதனைக்காக பெண்ணின் உடல் தானா மேரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker