Latestஉலகம்

சிங்கத்தை வீட்டில் வளர்ப்பதா? ஆடவரின் அசாத்திய துணிச்சல்

முல்தான், (பாக்.) ஜூன் 11– கர்ஜிக்கும் சிங்கத்தை நாம் காட்டில் சுதந்திரமாகத்  திரிவதைக் கண்டுள்ளோம்.  ஆனால், முல்தானில் ஆடவர் ஒருவர், சிங்கத்தைத் தம்முடைய வளர்ப்பு பிராணியாக தன்னுடைய வீட்டில் வளர்த்து வருவதாக டேய்லி மெயில் எனும் செய்தித்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

33 வயதான சுல்காய்ஃபி சாவ்டாரி  என்ற  அந்த ஆடவர்  6 மாதங்களுக்கு முன் சிங்கத்தை வாங்கி,  அதற்கு பாபர் என பெயரிட்டுள்ளார்.  அச்சிங்கத்தைக்  கூண்டினுள் வைக்காமல் அதனை செல்லப் பிராணி போல்  தன்னுடைய சொகுசு வீட்டில்  சுகாந்திரமாக நடமாட விட்டுள்ளதாகவும் செய்தி கூறுகிறது.

8 மாத பாபர் சிங்கமானது 76 கிலோ கிராம் உடல் எடையுடையது. தினசரி  8 கிலோ இறைச்சியை உண்ணும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. சுல்காய்ஃப்யின் 2 வயது பிள்ளையும் அவருடைய குடும்பத்தாரும் பாபர் செல்ல  நாய் போன்று வளர்த்து வருகின்றனர்.

மேலும், சுல்காய்ஃபிக்கு சிங்கத்தை மிகவும் பிடிக்கும் என்பதாலும் அவர் தன்னுடைய வீட்டில் சிங்கத்தை வளர்த்து வருகிறார். சிங்கத்தை வீட்டில் வளர்க்க பாபரை வாங்கிய பின்னரே,  சுல்காய்ஃபி தன்னுடைய குடும்பத்தாரிடம் அது பற்றிக்  தெரிவித்துள்ளார்.

மேலும், பாபர் தங்களை ஒருபோது தாக்காது என்றும் , சுல்காய்ஃபியின் மகன் பாபருடன்  பயமில்லாமல் விளையாடுவான் என்றும் அவர்  கூறினார். பாபரை தான் கூண்டிலோ அல்லது சங்கிலியாலோ கட்டவில்லை என்றும் அதுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

சிங்கத்தை  வீட்டில் வளர்ப்பதற்கு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  சுல்காய்ஃபி  கடந்த ஆண்டு இறுதியில் £ 3,200 (  ரி.ம. 17,000)க்கு அச்சிங்கத்தை சிங்கத்தை வாங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker