Latestமலேசியா

சேமநிதிப் பணம்- சுவிஸ் வங்கியில்! -நஜிப் வழக்கில் சாட்சியம்!

கோலாலம்பூர், ஜூன். 11- சேமநிதி வாரியப் பணம் 150 கோடி ரிங்கிட் சுவிஸ் வங்கியில் பத்திரமாக இருப்பதை உறுதிப்படுத்த எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வாரிய உறுப்பினர்கள் அங்கு சென்றதாக நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.

நஜிப் ரசாக்கின் எஸ்ஆர்சியின் பணம் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேட்டு வழக்கில் சாட்சியம் அளித்த 39 ஆவது சாட்சியான அந்நிறுவனத்தின் தலைவர் இஸ்மீ, சே அப்துல்லா, சுபோ மாட் யாசின், ஷாரோல் ஹல்மி மற்றும் நிக் பைசால் அரிப் காமில் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் லுகானோவில் இருக்கும் சுவிஸ் -பிஎஸ் ஐ வங்கியிற்குச் சென்றதாகத் தெரிவித்தார்.

அந்தப் பணமானது, சேமநிதி வாரியம் எஸ்ஆர்சிக்குக் கொடுக்க இணங்கிய கடனில் ஒரு பகுதி என இஸ்மீ தெரிவித்தார்.

அது பற்றி 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 7- இல் நிக் பைசால், நஜிப்பைச் சந்தித்த பின்னர், 150 கோடி ரிங்கிட் பணத்தில் 30 கோடி ரிங்கிட் ஹாங்காங் வங்கியிலும், 20 கோடி ரிங்கிட் உள்ளூர் வங்கியிலும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கூட்டக் குறிப்பில் அது குறிப்பிடப் பட்டுள்ளாதத் தெரிவித்த இஸ்மீ, அதன் நகலை நீதிமன்றத்தில் காட்டினார்.

2011, 2012 ஆகிய ஆண்டுகளில் சேமநிதி 400 கோடி ரிங்கிட் எஸ்ஆர்சிக்கு கடனாகக் கொடுக்கப் பட்டடதாகவும் அதே வேளையில் பல நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட பணம் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker