Latestஇந்தியா

டிக்கெட் பரிசோதனை:  தப்பியோடிய நபர்களை மற்றொரு ரயில் மோதியது! நால்வர் பலி!

இடாவா, ஜூன். 11- டிக்கெட் பரிசோதகரிடம் இருந்து தப்புவதற்காக ரயிலில் இருந்து குதித்து ஓடிய இளைஞர்கள் மீது மற்றொரு ரயில் மோதியது இதில் 4 நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

பீகார் மாநிலம், முசாபர்பூர் இருந்து மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காலையில் உத்தரப் பிரதேசத்திலிருந்து மாவட்டத்துக்கு உட்பட்ட பலராய் ரயில் நிலையத்துக்கு வந்தது.

அந்த ரயிலுக்கு பின்னால் டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. எனவே இந்த அதிவேக ரயில் வழி விடுவதற்காக அவார்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அப்போது அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர், முன்பதிவு பெட்டிகளில் இருந்த பயணிகள் பயணிகளிடம்  டிக்கெட்டுகளை பரிசோதித்தார். அந்த பெட்டிகளில் முன்பதிவு செய்யாத இளைஞர்கள் சிலர் இருந்தனர்.

அவர்களை பார்த்த டிக்கெட் பரிசோதகர் அபராதமாக தலா ரூ. 500 வழங்குமாறு அந்த இளைஞர்களிடம் கேட்டார். உடனே அந்த இளைஞர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் இருந்து தப்புவதற்காக ரயிலில் இருந்து அடுத்த தண்டவாளத்தில் குதித்து ஓடினார். .அப்போது அந்த தண்டவாளத்தின் டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்தது.

அந்த ரயில் எதிர்பாராதவிதமாக அந்த இளைஞர்கள் மீது மோதியது. இதில் நான்கு இளைஞர்கள் உடல் சிதறி பரிதாபமாக அந்த இடத்திலேயே மாண்டனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த கோர விபத்தை பார்த்து ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் அங்கு வந்த அதிகாரிகள் காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ரயில் மோதி உயிரிழந்த 4 வாலிபர்களும் உத்தரப் பிரதேசத்தின் கவுஷாம்பி மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்தில் வேலைக்காக சென்றநேரத்தில் இந்த சம்பவம் நடந்தது என தெரிய வந்தது . இந்த கோர சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker