Latestஇந்தியா

நாசர் அணியை வீழ்த்த நாடக நடிகர்களை  வளைக்கிறது பாக்கியராஜ் அணி!

சென்னை,ஜூன்.11- தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடுத்த நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.

பாண்டவர் அணியில் செயற்குழு உறுப்பினர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட சிலர் அந்த அணியில் இருந்து விலகி சுவாமி சங்கரதாஸ் அணியின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிமிடத்திலிருந்தே நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் ஆரம்பித்து விட்டதாக சொல்கிறார்கள் .

சுவாமி சங்கரதாஸ் அணிக்கான அனைத்து செலவுகளையும் அந்த அணியின் செயலாளர் பதவி நிற்கும் ஐசரி கணேஷ் கவனித்துக் கொள்வதாக சொல்லி விட்டாராம்.

நாசர் தலைமையிலான தற்போதைய நிர்வாகத்தினர் மீது எந்தவித குற்றச்சாட்டுக்களும் கிடையாது. கட்டிடம் கட்டும் வேலைகள் தாமதமாக உள்ளதா மட்டுமே அவர்களை பற்றிய ஒரு குற்றச்சாட்டாக உள்ளது .அந்த தாமதத்தையும் பாக்கியராஜ் அணிக்கு ஆதரவாக தற்போது இருக்கும் சிலர் தான் காரணம் என்பது அனைவருக்குமே தெரியும்.

நீதிமன்ற வழக்குகள் மற்றொரு காரணம். எனவே நாசர் தலைமையிலான அணிக்கு நாடக நடிகர்கள் ஓட்டுகள் கிடைத்து விடக்கூடாது என்பதில் பாக்கியராஜ் தரப்பில் இப்போதே வேலைகளை ஆரம்பித்து விட்டார்களாம்.

இதற்காக சைதாப்பேட்டையில் உள்ள ஐசரி கணேஷ்க்கு சொந்தமான கட்டடங்களில் நாடக நடிகர்கள் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்துவிட்டார்கள் என்பது தெரிய வருகிறது.

வேட்புமனு தாக்கலின்போது பாக்கியராஜ் நாடக நடிகர்களுக்கு பணம் தருவோம் என வெளிப்படையாகவே சொன்னதையும் விதிமீறல் என்கிறார்கள். பாண்டவர் அணி அவர்கள் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பதாக அதை சமாளிக்க நாடுகளுக்கு பணம் கொடுக்க சங்கரதாஸ் அணி முயற்சிப்பதாக நடிகர் சங்கத் தேர்தல் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker