Latestமலேசியா

போலீசாரிடையே லஞ்ச ஊழல்: ஒழிக்கப்பட வேண்டும்! – ஐஜிபி

கோலாலம்பூர், ஜூன் 11 – போலீஸ் படையில் நிலவும் லஞ்ச ஊழலை ஒழித்தால்தான் அதன் பலத்தை உறுதிப்படுத்த முடியும் என போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

லஞ்சம் ஊழல் ஒரு கொடும் பாவம் என்பதை உணர வைப்பதே தமது தலையாய கடமையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.போலீஸ் துறை என்பது ஒரு புனிதமான  தொழில்.  அதில் லஞ்சத்தை அனுமதிப்பது கடுமையான பாவம் என அவர் குறிப்பிட்டார்.

சிறப்புப் பிரிவு உட்பட போலீஸ் துறையின் 10 பிரிவுகளிலும் ஊழல் நிலவுகிறது. அதில் பல்வேறு சந்தர்ப்ப வாய்ப்புகள் இருப்பதால், அவற்றைத் தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதனை கருத்தில் கொண்டு, மாவட்ட மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அது பற்றிய நினைவூட்டல் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகளை நடத்த நன்கொடை வசூலிப்பை நிறுத்த வேண்டுமெனவும் தாம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இனி மேல் போலீசார் பொது உபசரிப்புகளை நடத்தத் தடை விதிக்கபடுவதாகவும் மற்ற பொது அமைப்புகள் நடத்தும் பொது உபசரிப்புகளில் அவர்கள் கலந்து கொள்வதில் தடை ஏதும் இல்லை என்றும் ஹமிட் படோர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker