Latestஉலகம்

450 மில்லியன் டாலர் ஓவியத்தை  வாங்கியவர் யார்?! மர்மம் அம்பலம்!

உலகப் புழ்பெற்ற ஓவியர் லியோனார்டோ டாவின்சியின்  தலைசிறந்த படைப்பு களில் ஒன்றை 450 மில்லியன் டாலருக்கு கைப்பற்றிய நபர் தொடர்பில் தற்போது மர்மம் விலகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு லியோனார்டோ டாவின்சியின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘ Salvator mundi ‘ என்ற ஓவியம் ஏலத்திற்கு விடப்பட்டது்

இந்த ஓவியத்தை பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் சாதனை விலைக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. அந்த ஓவியத்தின் உரிமையாளர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. ஆனால் இறுதி வரையில் அந்த மர்மம நபர் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் ரகசியம் காக்கப்பட்டது.

தற்போது அந்த ஓவியம் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சகல வசதிகளுடன் கொண்ட உல்லாசக் கப்பலில் பாதுகாக்கப் படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

500 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியமானது இளவரசர் சல்மானின் பெயரில் இன்னொரு சவுதி இளவரசர் வாங்கியதாக பிரபல பத்திரிக்கை அப்போதே தகவல்கள் வெளியிட்டது. ஆனால் இந்த தகவலை குறித்த ஓவியத்தை ஏலம் நடத்திய நிறுவனம் மறுத்திருந்தது.

தற்போது எகிப்தில் உள்ள கடற்கரை நகரம் ஒன்றில் இளவரசர் சல்மானின் உல்லாசக் கப்பல் நிறுத்தப்பட்ட நிலையில் அதனுள் டாவின்சியின் ஓவியம் இருப்பதை தனியார் ஊடகம் ஒன்று அம்பலப் படுத்தியுள்ளது. 500 ஆண்டு பழமையான அந்த ஓவியத்திற்கு உப்பு கடற் காற்று உகந்தது அல்ல என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker